இரவில் தூங்கச் செல்லும் முன் குளித்தால் இவ்வளவு நன்மையா? நீங்களே பாருங்களேன்...
நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் குளியல் மிகவும் அவசியமாகும். காலையில் குளித்து விட்டு வெளியில் சென்றால் தான் அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும், வாசனையோடும் இருப்போம். காலையில், தலைக்கு சரியாக எண்ணெய் மசாஜ் செய்ய முடியாது. துவட்ட நேரமின்றி ஓட வேண்டும்.
இதனால் தலைவலி, சைனஸ் போன்றவையும் தொற்றிக் கொள்ளும். ஆனால் இரவில் குளிப்பதால் அப்படியில்லை. பல நன்மைகள் உண்டாகின்றன. இப்படி குளிப்பது சுகாதாரத்தை மட்டும் உயர்த்தாமல் உளவியல் ரீதியாகவும் பல அற்புதங்களை வழங்குகிறது.
காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சருமத்தை பாதுகாக்க
இரவில் குளிப்பது மூலமாக உங்கள் சருமத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கோடைக்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்புகள் அனைத்தையும் போக்கி, உங்கள் சருமத்தை பொலிவுடன் வைக்கும்.
தூக்கப் பிரச்சினை
தூக்கப் பிரச்சினை மற்றும் உடல் சோர்வு உள்ளவர்கள் தினமும் இரவில் குளித்துவிட்டு உறங்குவது சிறந்தது.
நோய் தொற்று தடுக்க
நாம் இரவு முழுவதும் பலவிதமான கிருமிகளுடன் உறங்குவோம். அதிலும் கோடை காலங்களில் ஏராளமான கிருமிகள் உங்கள் மேல் படர்ந்திருக்கும். கிருமிகள் நம்மை அண்டாமல் இருக்க இரவில் குளித்து தூங்குவது சிறந்தது.
இயற்கை சரும எண்ணெய்
இரவில் தலைக்கு குளிக்கும்போது தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்க அவகாசம் கொடுக்கிறோம். இதனால் வறட்சியின்றி வெடிப்பின்றி கூந்தல் பாதுகாக்கப்படும்.
தலையணையில் உள்ள கிருமிகள்
தலையில் நிறைய பக்டீரியாக்களும், கிருமிகளும் இருக்கும். இரவு தூங்கும் முன் தலையை சுத்தம் செய்யாமல் அப்படியே படுக்கும்போது இந்த பக்டீரியாக்கள் உங்கள் தலையணைக்கும் பரவும். இதை தவிர்க்க வாரத்திற்கு இரு முறையாவது தூங்கும்முன் தலையை சுத்தம் செய்வது நலம் பெயர்க்கும்.