வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு பலன் இருக்குன்னு தெரியுமா?

252 Shares

தினமும் நம் வாழ்வில் பல காய்களையும் கனிகளையும் உண்டு வந்தாலும் எந்த எந்த காய் கனிகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ள கனி நெல்லிக்கனி. மரங்களில் காய்கள் தான் அந்த மரத்தின் விதைகளை கொண்ட கனியாக மாறுகிறது.

பழ வகைகள் அனைத்துமே சாப்பிடுவதற்கு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. பல மருத்துவ குணங்களை கொண்ட பழ வகைகள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு படம் தான் நெல்லிக்கனியாகும். தமிழ் மொழியில் நெல்லியை நெல்லிக்காய் என்றும் நெல்லிக்கனி என்றும் அழைக்கின்றனர்.

ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் குறைந்த பச்சம் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்தை பெறலாம் ஆய்வுகள் குறிப்பிடுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் விட்டமின் சி சத்து நெல்லிக்கனியில் அதிகமாக உள்ளது இந்த விட்டமின் சி சத்து இதில் இயற்கையாகவே இருப்பதால் அளவுடன் இதை எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது. இந்த விட்டமின் சி சத்து உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும்.

எலும்புகள் வலிமை இருக்க

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் நாம் குடித்து வருவதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் நம் உடலில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்க

நெல்லிக்காயில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. நெல்லிக்காய் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் நம் உடலில் புற்றுநோய் ஏற்படாது.

கண் பார்வை சரியாக

நெல்லிக்காய் சாரை அடிக்கடி குடித்துவர கண் குறைபாடுகள் நீங்கி கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க

நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வருவதால் வாயில் துர்நாற்றம் ஏற்படாது. வாய் துர்நாற்றம் அதிகம் உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

கொழுப்புக்கள் கரைய

நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.

மலச்சிக்கல் பிரச்சனை தடுக்க

நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நெல்லிக்காய் ஜூஸ் நாம் தினமும் குடித்து வரலாம்.     

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்