அளவுக்கு அதிகமாக காபி குடிப்பவரா நீங்கள்? அப்போ இந்த பிரச்சினை உங்களுக்குத்தான்!
காலையில் காபியில் கண் விழித்தால்தான் பலருக்கும் பொழுதே விடிந்தது போல இருக்கும். காபி குடிப்பது நல்லதா, கெட்டதா என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும், காபி பிரியர்கள் இல்லாத வீடுகளே கிடையாது. சோம்பலைப் போக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும், தலைவலியைப் போக்கவும் என விதவிதமான காரணங்களுக்காக காபி குடிப்பவர்கள் உண்டு.
ஒரு காபி இல்லாமல் அந்த நாளை நினைத்து பார்ப்பதே கடினமான ஒன்றாக இருக்கும். காபி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறியிருப்பார்கள். ஒரு நாளைக்கு 200 மி.கி.- 400 மி.கி அளவு காஃபின் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் உபயோகப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பாவிலுள்ள உணவுப் பாதுகாப்பு குழு 2015 ஆம் ஆண்டு ஒரு அறிக்கை விடுத்துள்ளது.
அதிக அளவில் காபி குடிப்பவர்களுக்கு லிபிட் ப்ரொஃபைல் எனப்படும் மொத்த கொழுப்பு அளவில் மாறுபாடு இருந்ததையும் அது இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எவ்வளவு அதிகமாக காபி குடிக்கிறோமோ அவ்வளவு அதிகமாக லிபிட் ஃப்ரொபைல் அதிகரிக்கும். இதற்கு காபியில் உள்ள கஃபெஸ்டால் என்ற மூலக்கூறு காரணமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதிகளவில் காபி குடிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பார்ப்போம் -
- உறங்கும் நேரத்தில் காபி குடித்தால் தூக்கமின்மை ஏற்படும்.
- ஒரு நாளைக்கு 4 கப் காபிக்கு மேல் குடித்தால் ஆயுள் காலம் குறையும்.
- அதிகளவு காபி அஜீரணத்தை ஏற்படுத்தும்.
- அதிகளவில் காபி குடித்தால் அடிக்கடிக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
- காபி அளவாக குடிக்கும் போது தலைவலி அறிகுறிகளைப் போக்கும், காபி அதிகமாக குடிப்பது ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும்.
-
காபி குடிப்பது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.