தினமும் 6 மிளகை மென்று தின்றால் வைரஸ் நோய்கள் உங்க கிட்ட நெருங்கவே நெருங்காதாம்!

life-style-health
By Nandhini Jun 18, 2021 10:24 AM GMT
Report

இந்தியாவின் தனித்துவமான மசாலா பொருட்களில் மிளகுக்கு என்று தனி இடம் உள்ளது. இந்தியாவின் வரலாறுக்கும், மிளகுக்குமே சுவராஸ்யமான தொடர்பு உள்ளது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் முதன் முதலில் மிளகை கொள்முதல் செய்யத்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார்கள்.

அந்த அளவிற்கு அனைத்து நாட்டினரையும் ஈர்க்கும் குணம் மிளகுக்கு உள்ளது. இது கொடி வகையை சேர்ந்ததாகும். இதன் சிறுகனிகள் பூத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் அறுவடைக்கு வரும்.

இது தவிர மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும். மிளகு வாணிகம் மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை ‘கருப்புத் தங்கம்’ என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக் காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

நெஞ்சுச்சளிக்கு

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் 6 மிளகை மென்று தின்பது சிறந்தது.

தொற்று நோய்

தினமும் 6 மிளகை மென்று தின்றால் உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மலட்டு தன்மை

இன்று நாம் உண்ணும் உணவுகள் விஷத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. இவற்றை உண்பதால் சில ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்துகிறது. தினமும் 6 மிளகை மென்று தின்றால் ஆண்களின் மலட்டு தன்மையை போக்க வல்லது.

பற்கள்

தினமும் 6 மிளகை மென்று தின்றால் பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். வாயில் ஈறுகளின் வீக்கம், பல்சொத்தை கிருமிகள் உற்பத்தி போன்றவற்றை தடுக்க மிளகு சிறந்த மருந்தாக உள்ளது.

ரத்த அழுத்தம்

நாற்பது வயதை நெருங்குபவர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்த உள்ளது. தினமும் 6 மிளகை மென்று தின்றால் ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து கொள்ள முடியும்.

மிளகின் மருத்துவ குணங்கள்:

  • கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன
  • மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது.
  • மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.
  • உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.
  • இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.
  • உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.