இந்த 5 உணவுகளை தப்பித்தவறி கூட சாப்பிட்டு விடாதீங்க! உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுமாம்!

life-style-health
By Nandhini Jun 16, 2021 01:37 PM GMT
Report
192 Shares

கொரோனாவுடன் சண்டையிடுவதற்கு உடலை தயார்ப்படுத்த, மக்கள் பல தீவிரமான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். அதில் ஒன்று, நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது.

இவை நாம் சாப்பிடும் தினசரி உணவுகளில் கிடைத்துவிடும் என்றாலும் அதை குறைக்கும் சில உணவுகளையும் நாம் தெரியாமல் தினமும் சாப்பிட்டுவிடுகிறோம் இதனால் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் குறைகிறது. எனவே அவை எந்தெந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தவிர்ப்பதே நல்லது.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள் நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது மற்றும் கடுமையான இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் உண்டாகும்.பிரஞ்சு ஃபிரை, சமோசாக்கள், பேக் செய்யப்பட்ட சிப்ஸ் அல்லது டீப் ஃபிரை செய்யப்பட்ட எதையும் சாப்பிடுவது ஆபத்து. எனவே அவற்றை தவிர்த்தல் நல்லது.

சர்க்கரை 

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் உட்கொண்டால், அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதோடு, நெக்ரோஸிஸ் ஆல்பா கட்டி , சி-ரியாக்டிவ் புரோட்டீன் மற்றும் இன்டர்லூகின்-6 போன்ற அழற்சி புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் அதிகமாக உட்கொள்ளும்போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். ஏனெனில் அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. மேலும் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம்.  

[

உப்பு

அதிக உப்பு சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடும். சிப்ஸ், பேக்கரி உணவுகள், உறைந்த உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதால் அவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். பாக்டீரியா தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்கும்.

 காபி, தேநீர் 

அதிக காபி, தேநீர் உட்கொள்வது உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்யும். இதனால் அழற்சி செயல்பாடுகள் தடைபடலாம். இதனால் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை சமரசம் செய்யும் நிலைக்கு தள்ளப்படும். எனவே கஃபைன் உணவுகளை தவிருங்கள். காஃபி, டீயையும் தவிர்ப்பது நல்லது.