கர்ப்பப்பை நீர்க்கட்டி வர காரணங்களும், விளைவுகளும்! பெண்களே உஷார்!

life-style-health
By Nandhini Jun 16, 2021 10:04 AM GMT
Report

பெண்மைக்கு மட்டுமே கிடைத்த சிறந்த பரிசு கர்ப்பப்பையாகும். சந்ததிகளின் பெருக்கம் என்பது இந்த ஒற்றை உறுப்பை சார்ந்துதான் இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் நம்முடைய முறையற்ற உணவு முறையாலும், வாழ்க்கை முறையாலும் இந்த கர்ப்பப்பையில் பல கோளாறுகளை நாமே உருவாக்கி கொள்கிறோம்.

நீர்க்கட்டி வர காரணம் :

பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் வரலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரியும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

கர்ப்பப்பை நீர்க்கட்டி வர காரணங்களும், விளைவுகளும்! பெண்களே உஷார்! | Life Style Health

நீர்க்கட்டி ஏற்படும் விளைவுகள்

சிறுநீர்ப்பையை ஒட்டி நீர்க்கட்டிகள் தோன்றியிருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தொன்றுவதுடன்.

சிறுநீர் கழிப்பதிலும் சிரமம் ஏற்படும். கருப்பை வாய் அருகே நீர்க்கட்டிகள் தோன்றியிருந்தால் உறவின் போது கடுமையான வலி ஏற்படும்.

கட்டிகள் பெரிதாகும் போது இடுப்பின் பின் புறம் மற்றும் காலில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

முகம், மார்பு ஆகிய பகுதிகளில் முடி வளர்ச்சி காணப்படுவது

தீவிரமான முடி உதிர்தல் பிரச்சனை

சருமம் மற்றும் முடி சார்ந்த ஒவ்வாமைகள் ஏற்படுவது

25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுக்கூடும்.

கர்ப்பமானாலும், கரு கலைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, இதயப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நீர்க்கட்டியை கரைக்க வழிமுறைகள் -

ஆளி விதை

ஆளி விதையில் அதிகளவு ஒமேகா மற்றும் புரத சத்து அதிகம் உள்ளது. ஆளி விதை பொடியை தினமும் தண்ணீரில் அல்லது பழச்சாரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.

துளசி

எட்டு துளசி இலையை மென்று சாப்பிட்டு வந்தால் நீர்கட்டிகள் பிரச்சனைகள் குணப்படுத்தலாம்.

தேன்

தினமும் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேனை கலந்து ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால், உடல் எடை குறைவதுடன் நீர்க்கட்டிகளும் கரையும்.

நெல்லிக்காய்

தினமும் நெல்லிக்காய் சாறை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு டம்ளர் அளவில் குடித்து வந்தால் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துவதுடன் நீர்க்கட்டியையும் குணப்படுத்தும்.