பப்பாளி அதிகம் சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்ன்னு தெரியுமா?
பப்பாளி பழம் ஆண்டு முழுவதும் எளிதாக கிடைக்க கூடிய பழங்களில் ஒன்று. இனிப்பு சுவை நிறைந்த பப்பாளி பழம் உலகம் முழுவதும் வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது.
பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது. இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையாகவும் இருக்கும்.
சரும பிரச்சனைகள் இருந்து சிறுநீரக கற்களை போக்கும் வரை இதன் பயன்கள் ஏராளம். பார்ப்பதற்கு பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த பழத்தில் கருப்பு ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன.
இதில் விட்டமின் ஏ முதல் ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. எனவே பப்பாளி ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிலும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல், எந்த ஒரு உணவை சாப்பிடும்போது அளவாக சாப்பிட்டால் அது உடல் நலத்திற்கு நன்மை தரும். ஆனால், ஆசைப்பட்டு அதிகமாக சாப்பிட்டுவிட்டால் அதன் பின்விளைவுகளை சந்திக்கத்தான் நேரிடும்.
பப்பாளி அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்
வயிற்று வலி
பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால் வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படலாம். எரிச்சல் அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் ஒருவித எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்குகிறது.
வயிற்றுப் பிடிப்பு
பப்பாளியை அதிகமாக சாப்பிடும்போது, அதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பில் தொந்தரவை ஏற்படுத்தும். அதிகப்படியான பப்பாளியை உட்கொள்வது வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்திவிடும்.
ஒவ்வாமை
பப்பாளி அதிகம் சாப்பிட்டால், வீக்கம், தலைச்சுற்றல், தலைவலி மற்றும் அரிப்பு ஆகியவை இந்த எதிர்விளைவுகளில் அடங்கும். ஆகையால் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
குறை பிரசவம்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சற்று தாமதமாக இந்த பப்பாளியை சாப்பிட்டால், குறை பிரசவத்தில் குழந்தை பிறக்கும். நிறைய பெண்களுக்கு பப்பாளி அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் அலர்ஜிக்கு லாடெக்ஸ் அலர்ஜி என்று பெயர். இந்த அலர்ஜியால் பாதிக்கப்பட்ட பெண்கள், இதை பார்த்தாலே அவர்களுக்கு அந்த அலர்ஜி வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
இரத்த அழுத்தம்
பப்பாளி இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இதற்கிடையில் அதிகமாக பப்பாளி சாப்பிட்டால், நீங்கள் இரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது இது மிகுந்த தீங்கை விளைவித்து விடும்.
ஆண்களின் விந்தணு
பப்பாளி அதிகம் சாப்பிட்டால் ஆண்களின் கருவளத்தைப் பாதிக்கும். முக்கியமாக இதன் விதைகள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து விடும். ஆண்களுக்கு சிறுநீரக கற்களை உண்டாக்கும்.