தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டால் எவ்வளவு நன்மை தெரியுமா?

life-style-health
By Nandhini Jun 15, 2021 12:22 PM GMT
Report
105 Shares

அமுதக்கனிகளில் ஒன்று நெல்லிக்காய். அத்தகைய நெல்லிக்காயை தினமும் நாம் சாப்பிட்டல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு பெருகும், என்றும் இளமையுடன் இருக்கலாம்.

நெல்லிக்காய் எப்படியோ அப்படித்தான் தேன் ஒரு அமுத சுவையும் பல உயிர்ச்சத்துக்களும் கொண்டவை. தேன் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து கிருமிகளை வளர விடுவது இல்லை.

புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகும். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயில் குளுகோஸ், புரக்டோஸ், ஆன் டி ஆக்ஸைடு, இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் அடங்கியுள்ளது.

நெல்லிக்காய் மற்றும் தேனில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடும் போது உடலுக்கு இருமடங்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டால் எவ்வளவு நன்மை தெரியுமா? | Life Style Health

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!

இதய நோய்கள்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகையை கட்டுப்படுத்தும். இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வருவதை தடுக்கலாம்.

கொலஸ்ட்ரால் குறைய

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் உட்கொண்டு வர, அதில் உள்ள வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

முடி வளர்ச்சி

முடி கொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் ‘தேன்’ நெல்லிக் காயைச் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள மருத்துவக் குணங்களால் முடி கொட்டுதல் தடுக்கப்படும். ரோமக்கால்கள் வலு வடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.   

கண் எரிச்சல்

கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாக்க தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம்.

சருமம் அழகாக

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.