மாஸ்க் போட்டு போட்டு அலர்ஜி ஏற்படுதா? தடுக்க இதை செய்க!

life-style-health
By Nandhini Jun 14, 2021 12:24 PM GMT
Report

வைரஸிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முகக்கவசம் அணிவது இன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நமது வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று கூட சொல்ல முடியும்.

இப்போதைய சூழலில் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ வெளியே செல்ல நேர்ந்தாலும் முகக்கவசம் அணிந்தாக வேண்டும். சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது.

ஏனெனில் சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்துகின்றது.

மாஸ்க் போட்டு போட்டு அலர்ஜி ஏற்படுதா? தடுக்க இதை செய்க! | Life Style Health 

இவற்றை தடுக்க ஒரு சில வழிமுறைகள் உள்ளது . தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வீட்டிற்கு சென்றதும் முகக்கவசத்தை கழற்றிவிட்டு சருமத்தை நன்றாக சுத்தம் செய்துவிட வேண்டும். அதன் மூலம் சரும துளைகள் அடைக்கப்படுவதை தடுக்கலாம்.
  • வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை சுத்தம் செய்ததும் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் கிரீமை பயன்படுத்தலாம். அது எண்ணெய் தன்மை இல்லாததாக இருக்க வேண்டும். ஏனெனில் அது சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சரும எரிச்சலையும் போக்கும்.
  • புற ஊதாக்கதிர்கள் படிவதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாகும். அவை சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்திவிடும். ஆதலால் உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது.
  • எலாஸ்டிக் பிணைக்கப்பட்டிருக்கும் முகக்கவசத்தை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் எலாஸ்டிக் பதித்த முகக்கவசம் அணியும்போது இறுக்கம் அதிகமானால் ரத்த ஓட்டத்தை பாதிக்கச்செய்துவிடும். அதனால் சருமம் சிவத்தல், வீக்கம் ஏற்படுதல், அரிப்பு உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் தோன்றும். சருமத்தின் மென்மையை பாதிக்கும் வகையில் முகக்கவசம் அமைந்துவிடக்கூடாது.
  • பெண்கள் முகக்கவசம் அணியும்போது ஒப்பனை செய்து கொள்வதை அதனை தவிர்ப்பதுதான் நல்லது. ஏற்கனவே முகத்தை மூடியிருக்கும்பட்சத்தில் ஒப்பனை பொருட்களும் ஆக்கிரமித்தால் சருமத்திற்கு தேவையான காற்று கிடைக்காது. அதன் காரணமாக சருமத்தில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உருவாகிவிடும்.