நுரையீரலைப் வலுப்படுத்த இந்த யோகாப் பயிற்சியை தினமும் செய்க!

life-style-health
By Nandhini Jun 12, 2021 11:56 AM GMT
Report

ஊரடங்கில் நாம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் கலையான யோகப்பயிற்சிகள் செய்து உடலையும் மனதையும் பக்குவப்படுத்தினால், ஊரடங்கு முடிந்தவுடன் உடல் திடமாக காணப்படும்.

அந்தவகையில் தற்போது ஊரடங்கு நேரத்தில் செய்யக்கூடிய உடற்பயிற்சி என்னென்ன என்பதை பார்ப்போம்

நுரையீரலை வலுப்படுத்தும் முறை

முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகள் சின் முத்திரையில் இருக்கவும். கண்களை மூடி இரு மூக்கு துவாரத்தின் வழியாக மெதுவாக, நிதானமாக மூச்சை இழுக்கவும், உடன் மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

இது போல் பத்து முறைகள் செய்யவும். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் ஒரு ஐந்து நிமிடம் கூர்ந்து கவனிக்கவும். இது நுரையீரலுக்கு நல்ல சக்தியை தரும். உடல் முழுக்க பிராண ஆற்றல் நன்கு இயங்கும்.

நுரையீரலைப் வலுப்படுத்த இந்த யோகாப் பயிற்சியை தினமும் செய்க! | Life Style Health

உட்கட்டாசனம்

எழுந்து நில்லுங்கள். இருகால்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கைகளை முன்னாள் ஒரு அடி இடைவெளியில் நீட்டவும். மெதுவாக ஒரு நாற்காலியில் அமர்வது போல் படத்தில் உள்ளது போல் நிற்கவும். பத்து வினாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் நேராக நிமிர்ந்து நிற்கவும். இதே போல் மூன்று முறைகள் பத்து வினாடிகள் செய்யவும்.

பலன்கள்:

நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். மூச்சு திணறல் வராது, மூட்டுவலி வராது, மூட்டுக்கள் பலம் பெறும்.

நுரையீரலைப் வலுப்படுத்த இந்த யோகாப் பயிற்சியை தினமும் செய்க! | Life Style Health

புஜங்காசனம்

விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களும் சேர்ந்திருக்கட்டும். இரு கைகளையும் இதயம் பக்கத்தில் கைவிரல் தரையில் படும்படி இருக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து, முதுகை, தலையை பின்னால் வளைத்து இடுப்பிற்கு மேல் உயர்த்தவும்.

ஒரு பத்து வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரைக்கு வரவும். இதே போல் மூன்று முறைகள் செய்யவும்.

முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டாம்.

பலன்கள்:

நுரையீரல் நன்கு இயங்கும். கழுத்துவலி, முதுகு வலி வராது. ஆஸ்துமா, சைனஸ் நீங்கும். நீரிழிவு வராது, மன அமைதி கிடைக்கும், உடல் எடை அதிகமாகாது. இடுப்பு வலி வராது, மூட்டுக்கள், தோள்பட்டை எலும்புகள் வலுப்பெறும்.

நுரையீரலைப் வலுப்படுத்த இந்த யோகாப் பயிற்சியை தினமும் செய்க! | Life Style Health

பத்மாசனம்

தரையில் விரிப்பு விரித்து அமரவும். ஒவ்வொரு காலாக மடித்து தொடைமேல் படத்தில் உள்ளபடி போடவும். இரு கைகளும் சின் முத்திரையில் வைக்கவும். கண்களை மூடி சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

பலன்கள்:

மன அழுத்தம் நீங்கும். ரத்த அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். நேர்முகமான எண்ணங்கள் வளரும். இதயம் பாதுகாக்கப்படும். இதய வால்வுகள் நன்கு இயங்கும். மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் நன்றாக இயங்கும். சுறுசுறுப்பாகவும். உற்சாகமாகவும் இருக்கலாம்.