அப்பப்பா.... தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் இவ்வளவு நன்மையா? நீங்களே அசந்துடுவீங்க!

life-style-health
By Nandhini Jun 10, 2021 09:38 AM GMT
Report
221 Shares

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் எந்தளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறாரோ அந்தளவுக்கு உடம்புக்கு நல்லது. எளிதாகக் கிடைக்கும் விஷயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான், ‘வெந்நீர்’.

தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம்.

தினமும் காலையில் வெந்நீர் அருந்தினால், உங்கள் குடலில் சிக்கியுள்ள முந்தைய கழிவுகளை நகர்த்த உதவுகிறது. தினமும் காலையில் மிதமான நீரை விட வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்யம் கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குளிர்ந்த நீரை விட வெந்நீரை ஆறவைத்து குடிப்பதனால் மேலும் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது. காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

அப்பப்பா.... தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் இவ்வளவு நன்மையா? நீங்களே அசந்துடுவீங்க! | Life Style Health

வெந்நீரில் அடங்கியுள்ள எண்ணற்ற பலன்களைப் பற்றி பார்ப்போம்

நச்சுக்கள் அகல

வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது.

முடி வளர்ச்சிக்கு 

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.

கெட்ட கொழுப்புகள் கரைய உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலை எழுந்ததும் வெந்நீர் அருந்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைகிறது.

தொடர்ந்து சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • ஏதாவது எண்ணைப் பல காரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.
  • தொடர்ந்து வெந்நீர் குடித்தால், உடம்பில் சேரும் கொழுப்பு கரையும்.
  • சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.
  • அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.
  • வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.
  • வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.
  • நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.
  • மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.