வாய்ப்புண் உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலை வேண்டாம்! இதோ வழி!

life-style-health
By Nandhini Jun 08, 2021 08:32 AM GMT
Report

இன்று வாய்ப்புண் வருவது சாதாரண விஷயமாகிவிட்டது. அதை சரியாக கவனிக்காமல் விட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும்.

ஆரம்பத்தில் உதடு, கன்னம், நாக்கு ஆகிய பகுதிகளில் சிறிதாகத் தோன்றும் கொப்புளங்கள் நாளடைவில் உடைந்து குழிப்புண்களாக மாறி வலியை உண்டாக்கும்.

இதனால் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி எடுக்கும். வாய்ப்புண்கள் தொடர்ந்து நீண்ட நாட்கள் காணப்பட்டால் புற்று நோயாக மாறவும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும் வாயில் துர்நாற்ற்றம் ஏற்படும்.

வாய்ப்புண் வர காரணங்கள் -

மன அழுத்தம்

‘பி’ சத்துக் குறைவு

இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்

புகைப் பிடித்தல்

ஹார்மோன் மாற்றங்கள்

வாய்ப்புண் உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலை வேண்டாம்! இதோ வழி! | Life Style Health

வாய்ப்புண்ணிலிருந்து விடுபட -

தேங்காய்ப்பால்

தேங்காய்ப்பால் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதே போல அதில் வாய்ப்புண்ணையும் ஆற்றும் சக்தி மிக அதிகமாகவே உள்ளது.தேங்காய் பால்  எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் இலைகளை வேகவைத்த நீரில், அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும். கடுக்காய்,நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்க்கொப்பளிக்க புண் ஆறும்.

மணத்தக்காளி

மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிதுநேரம் வாயிலே வைத்திருந்து விழுங்கலாம்.  

வாய்ப்புண் உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலை வேண்டாம்! இதோ வழி! | Life Style Health

உப்பு மற்றும் எலுமிச்சை

மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும். மஞ்சள் தூள் மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன்கிடைக்கும்.

மாதுளம்பழத் தோல்

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.