பூஞ்சை வைரஸ் தொற்றிலிருந்தும் விடுபட, நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டுமா? அப்போது தினமும் இதை சாப்பிட்டால் போதும்!
ஆண்ட்டிபயாட்டிக் சக்திகள் இருக்கின்றன. உடலில் ஏற்படுகிற பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை அகற்றிடும்.
ஆரோக்கியத்திற்கு பூண்டு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். பூண்டைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும்,
ரத்த நாளங்கள் லகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் துரத்திவிடலாம். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.
வறுத்த பூண்டை சாப்பிடுவதால் உள்ள நன்மைகள் என்ன?
புற்று நோய் செல்களை அழிக்க
வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் எற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது.
கொழுப்புக்கள் கரைய
உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
இதய நோய்
உடலில் ரத்த ஓட்டத்தில் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது. பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல்( Anti Bacterial) இரத்த நாளங்களில் நுழைந்தப் பின் இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும். இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இரத்த அழுத்தத்தை சீராக்கும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும். உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்து. உடலின் சோர்வை நீக்குகிறது. சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
பூண்டின் பலன்கள்
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைத்து. உடல் எடையினை சரியான அளவில் வைத்துக்கொள்கிறது
- உடலில் ஏற்படும் அலர்ஜிகளையும், பூஞ்சை தொற்றுகளையும் எதிர்த்து போராடும் குணம் பூண்டில் உண்டு.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உதவுகிறது.
- உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
- எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
- அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
-
உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்