நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? அலட்சியம் வேண்டாம்!

life-style-health
By Nandhini Jun 08, 2021 06:35 AM GMT
Report

ஒரு சிலருக்கு இதயம் சற்று பட படவென அடித்துக் கொண்டே இருக்கும். அவர்களுக்கு எப்போதும் தூக்கம் வந்துகொண்டே இருக்கிற மாதிரி தோணும். சிறிது தூரம் நடந்தால் கூட அவர்களுக்கு மூச்சி வாங்க ஆரம்பித்து விடும்.

இது சில நேரம் ஹீமோகுளோபின் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது உடலில் வைட்டமின் குறைப்பாடுகள் இருக்கலாம். இதற்காக பயப்படதேவையில்லை.

இந்த பிரச்சினை ஒரே தீர்வு எதுவென்றால், காய்ந்த திராட்சை தான்…

இதயம் படபடப்பு ஏற்படும் போது -

இதயம் படபடவென அடிக்கும் நேரத்தில், காய்ந்த திராட்சைகள் 5 வாயில் மென்று சாப்பிட்டு தண்ணீர் ஒரு கப் குடிக்க வேண்டும். அப்போது, சில நொடியில் சரியாகிவிடும். ஹீமோகுளோபின் அதிகரிக்க 20 காய்ந்த திராட்சைகளை ஒரு கோப்பையில் போட்டு ஒரு அரை கப் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். காலையில் எழுந்துவுடன் அந்த தண்ணீரை குடித்து வந்தால், உங்களுக்கு ஹீமோகுளோபின் பிரச்சனை சரியாகி விடும்.

இயல்பான இதயம் படபடப்பு -

உடற்பயிற்சி செய்த பின்னர் அல்லது ஏதாவது உணர்ச்சி வசப்படும் தருணத்தில் ஏற்படும் இதய படபடப்பு இயல்பானதுதான். காய்ச்சல், உடல்வலி, பயம், மனக்கலக்கம் போன்றவை ஏற்படும் நேரங்களில் இதயம் படபடப்பது இயல்பு. ஓய்வெடுத்தால், நோய் குணமானால் இவ்வகை படபடப்பு மறைந்துபோகும்.

ஆபத்தான இதயம் படபடப்பு -

இதயத்தில் ஏற்படும் கோளாறு காரணமாக படபடப்பு ஏற்பட்டால் அது ஆபத்தான அறிகுறி. இவ்வகை படபடப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நெஞ்சு பாரம், நெஞ்சு வலி, வியர்வை, பெலவீனம், மயக்கம், தலைசுற்றல், வாந்தி மற்றும் வலிப்பு போன்ற உடல் நடுக்கம் ஆகியவை நெஞ்சு படபடப்புடன் இணைந்து ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? அலட்சியம் வேண்டாம்! | Life Style Health

நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

  • நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால் பதற்றம் அடையக் கூடாது.
  • அமைதியாக அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும்.
  • இந்த சமயத்தில் வாகனங்களை ஓட்டக்கூடாது.
  • உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது சிறந்தது.
  • உங்களுடன் இருப்பவருக்கு நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால், நெஞ்சை அழுத்தி துடிக்க வைக்க (CPR – cardiopulmonary resuscitation) முயற்சிக்கலாம்.