பி.சி.ஓ.எஸ் ஏற்பட காரணம் என்ன? அறிகுறிகளை கண்டறிவது எப்படி ?
life-style-health
By Nandhini
இன்றைய காலக்கட்டத்தில் பெண்களை தாக்கும் ஒரு முக்கிய நோயாக பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) உள்ளது. இதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாததே முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது.
பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அந்த வகையில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இதனை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். என்ன காரணங்களால் ஏற்படுகின்றது?
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள்
- உடற்பயிற்சியின்மை
- மோசமான வாழ்க்கை முறை
- புகைபிடித்தல்
- மன அழுத்தம்
- போதிய தூக்கமின்மை
பி.சி.ஓ.எஸ் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது எப்படி ?
- ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்சினையின் முக்கிய அறிகுறிகளாக உள்ளது.
- பெரியவர்களுக்கு மாதவிடாய் காலங்கள் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பிறகு நிகழும்போதும், இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தாலோ மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது.
- உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40–80 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்கள் ஆகும்.
- ஆண் ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு மற்றும் முடி வளர்வது. குறிப்பாக முகத்தில் அதிகளவு முடி வளர்வது ஒரு முக்கிய அறிகுறியாகும். உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது. டைப் 2 நீரிழிவு நோய் மற்றொரு முக்கிய அறிகுறியாக உள்ளது.
- இதனால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.
இதனை எப்படி சரி செய்யலாம்?
- பீட்சா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.
- வழக்கமான உடல் உடற்பயிற்சி, நடை பயிற்சியில் ஈடுபடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
- உங்கள் அன்றாட செயல்பாட்டை அதிகரிப்பது இன்சுலின் அளவை சீராக வைத்து கொள்ளலாம்.
- இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
- தினசரி 7- 8 மணிநேர இடைவிடாத தூக்கம் பி.சி.ஓ.எஸ் வராமல் தடுக்க உதவும் ஒரு முக்கிய காரணியாகும் பி.சி.ஓ.எஸ்-ல் இருந்து நீங்கள் குணமடைய விரும்பினால் மன அழுத்தத்தை குறைக்க நேரம் ஒதுக்குவது அவசியமாகும்.
- இதற்கு தினமும் யோகா, நீச்சல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.