பேராபத்து விளைவிக்கும் மஞ்சள் பூஞ்சை நோய் எப்படி பரவுகிறது? யாரையெல்லாம் தாக்கும்?

life-style-health
By Nandhini Jun 06, 2021 11:31 AM GMT
Report

கொரோனா தொற்றுக்குப் பின் குணமடைந்த நோயாளிகளிடையே அதிகரித்து வரும் பூஞ்சை தொற்று மருத்துவ உலகின் புதிய நெருக்கடியாக அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இது மக்களிடையே அதிமாக பரவுவது முதல்முறை என்பதால் இந்த தொற்றுநோய் பற்றிய ஏராளமான தவறான கருத்துக்களும் பரவி வருகின்றன. நோயைக் காட்டிலும் இந்த வதந்திகள்தான் மக்களிடையே பயத்தை அதிகரிக்கிறது.

பூஞ்சை தொற்று நோய் என்றால் என்ன? கருப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் என வகுத்துள்ள இந்த பூஞ்சைகள் சுற்றுச்சூழலில் ஏற்கனவே இருக்கும் தொற்றாகும். இந்த பூஞ்சைகள் ஆரோக்கியமான நபருக்கு எந்தவிதமான தொற்றுநோயையும் ஏற்படுத்தாது.

இருப்பினும் ஏதேனும் உடல்நல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை நேரடியாக தாக்குகிறது. காய்ச்சல், தோல் புண், மூச்சுத் திணறல், தலைவலி மற்றும் சோர்வு ஆகியவை இந்த பூஞ்சை தொற்றுநோய்களின் அறிகுறிகளாகும். ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும். இல்லையெனில் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இந்தியாவில் பரவி வரும் மற்றுமொரு நோயாக மஞ்சள் பூஞ்சை உள்ளது. இது கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை ஆகியவற்றை விட மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவத் துறையினர்.

உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்யும் அளவுக்கு மஞ்சள் பூஞ்சை ஆபத்தானது. எனவே அறிகுறிகளை கவனித்தால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யாரை எல்லாம் பாதிக்கும்?

மஞ்சள் பூஞ்சை நோய் பாம்பு, பல்லி உள்ளிட்ட ஊர்வனவற்றுக்கே ஏற்படும். சுகாதாரமாக இல்லாததும், சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் மஞ்சள் பூஞ்சை நோய் ஏற்படலாம்.

மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகள்

  • சோம்பல்
  • பசி குறைவது
  • பசியின்மை
  • எடை இழப்பு
  • நெக்ரோசிஸ் காரணமாக கண்கள் வீக்கம்

இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?

  • வீட்டில் பழைய உணவுகளை சேர்த்து வைத்துக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • கழிவறை உரிய வகையில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • மலம் கழிவறையில் தேங்கி இருக்கக்கூடாது.
  • வீட்டில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கக் கூடாதுநன்கு காய்ந்த நிலையில் வீட்டின் தரை மற்றும் சுவர் பராமரிக்கப்பட வேண்டும்.
  • இதற்கு சூரிய ஒளி வீட்டுக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும்.
  • நன்கு காற்றோட்டம் இருக்க வேண்டும், இரண்டுக்கும் வழி இல்லாவிட்டால் மின்விசிறி போன்றவற்றை இயக்கி அறையில் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும்.