ஒற்றைத் தலைவலி போக சூப்பரான வழி!
life-style-health
By Nandhini
பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி ஒன்றைத்தலைவலி ஏற்படுவது வழக்கம். இது நரம்பியல் தொடர்பான ஒரு நோய். மூளையில் ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே ஒற்றை தலைவலி ஆகும்.
ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்க்கை, பழக்க வழக்கங்களை பொறுத்து ஒற்றை தலைவலி தாக்குகிறது. குறிப்பிட்ட மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஒற்றைத் தலைவலி மற்றும் அதன் தீவிரத்தை குறைக்கலாம்.
அதிலும் ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு சில பயிற்சிகளும் உதவுகின்றது. தற்போது அதில் ஒன்றை இங்கு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
செய்முறை
- கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும்.
- மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும்.
- நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்த நிலையில், கால்களைத் தரையில் ஊன்றிச் செய்யலாம்.
- விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டும் செய்யலாம். காலை, மாலை என 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
- வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே செய்ய வேண்டும்.
பலன்கள்
- மனஅழுத்தத்தால் உண்டாகும் தற்காலிக மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.
- நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.
- நீர்க்கோவைப் பிரச்னையால் வரும் தலைவலி சரியாகும்.
- மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.
- வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சியுடையோர், மன அழுத்தம், கோபம், மனசோர்வு ஆகியவை நீங்கி இயல்புநிலைக்குத் திரும்ப உதவும்.