இதை செய்தால் போதும்! கொரோனா தொற்றை விரட்டியடிக்கலாம்!
கொரானா கிருமி கபத்தை கூட்டும். அதாவது நமது உடலில் இருக்கும் தண்ணீரை சளியாக மாற்றும். கொரானா கிருமியால் வேகமாக நுரையீரல் முழுவதும் சளியை பரப்பும். அதன்பின்புதான் நமது உயிர் போகும் அளவிற்கு பிரச்சினை வருகிறது.
அதாவது, நுரையீரலுக்கு போக வேண்டிய பிராணன் உள்ளே போக முடியாமல் போகும். நுரையீரலுக்கு உள்ளே கழிவுகளாக வெளியேற வேண்டிய கரியமில வாயு அதை வெளியேற்ற முடியாமல் போகும்.
மூளைக்கும், நமது உறுப்புகளுக்கும் பிராணன் தேவை. நுரையீரல் முழுவதும் சளி அடைக்கப்படுவதால் அது தடைப்போகிறது. இதற்காக தான் செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சையை மருத்துவமனையில் மேற்கொள்கிறார்கள்.
இன்னும் கொரோனா தொற்று பற்றி விளக்கமாக சொல்வோமானால், ஒரு தண்ணீரை குளிர் பெட்டியில் வைக்கும்போது அது ஐஸ் கட்டியாக மாறிவிடும். வெளியே எடுத்தால் அது உருகிவிடும். அதுபோலதான் கொரோனா என்பது குளிர்விக்கும் ஒரு நோய்யாகும். அதற்கு எதிரி வெப்பப்படுத்துதல். அப்படி கொரோனா தொற்றை வெப்பப்படுத்தினால் கொரோனாவிலிருந்து நாம் தப்பித்துவிடலாம்.
ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இந்தமாதிரியான கபம் நோய்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆவி பிடித்தலாகும்.
ஆவி பிடித்தல்
பாத்திரத்தில் மிதமாக கொதிக்க வைத்த தண்ணீரை கீழே வைத்து, போர்வையால் நம்மை மூடி, அந்த ஆவியை நாசியில் உள்ளே மெதுவாக விட நுரையீரலில் புகும் ஆவி கிருமிகளை அழிக்கும். உடனே வியர்வையாக வெளியே வரும். அந்த ஆவி பிடித்த போர்வையை வேர்வையை தோடைத்த துண்டை வேறு யாரும் பயன்படுத்த கூடாது.
கொரானாவிற்கு தடுப்பு ஊசி மருந்து தேடுகிறார்கள். கொரானா சூடான ஆவியில் தான் மடியும். ஆவி பிடித்தல் கொரானாவை கொல்லும் ஆயுதம். இதை அனைவரும் சோதனை செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும்.
எப்படியெல்லாம் ஆவி பிடிக்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம் -
தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கும்போது, தண்ணீரில் மஞ்சள், மிளகு, எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி போட்டு, ஆவி நன்கு வரும்போது இறக்கி வைத்து பாதுகாப்பாக அமர்ந்து ஆவியை நன்கு உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும்.
ஒரு 10 நிமிடங்கள் பிடித்தால் போதும். அதிக நேரம் பிடிக்ககூடாது. உங்களால் தாங்க முடிந்த அளவுக்கு ஆவி பிடிக்கலாம்.
கொரானாவிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள -
- குளிர்ந்த பொருட்களை சாப்பிடக்கூடாது.
- குளிர் பெட்டியில் வைத்த பொருட்களை அப்படியே எடுத்து உண்ணக்கூடாது.
- தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வெயிலில் நன்கு நடக்க வேண்டும்.
- மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம்.
-
மூலிகை வழி, பயிற்சி வழி, சுவாச பயிற்சி வழி, உணவு வழியில் கொரோனாவிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.