மூச்சுதிணறால் அவஸ்தைப் படுகிறீர்களா? ஆரம்ப நிலையில் சரி செய்ய வழிமுறைகள்!

life-style-health
By Nandhini Jun 03, 2021 12:46 PM GMT
Report

சுவாசத்தைப் பொருத்தவரைக்கும் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு பார்த்தீர்களென்றால் 12 லிருந்து 20 வரை சுவாசம் வேண்டும். இந்த அளவு கீழே குறைந்தாலோ, இருபதுக்கு மேல் அதிகமாகும் பொழுது அப்நார்மலாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் நாம் மூச்சுத்திணறல் என்று கூறுகிறோம். இந்த மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நம் வாழ்க்கைக்கு சுவாசம் ரொம்ப முக்கியம்.

இயற்கையாய் நிகழும் சுவாசம் நாம் அறியாமலேயே நிகழ்கின்றது. இந்த மூச்சு நிகழ்வில் சிரமம் ஏற்படும் பொழுது, தேவையான காற்று கிடைக்கவில்லை என்பது போல் உணர்வு ஏற்படும் பொழுது ஒரு தொந்தரவினை உணர்கிறோம்.

சிலருக்கு எளிய பயிற்சியே மூச்சு வாங்கும். மாடி மெதுவாய் ஏறினால் கூட சிலருக்கு மூச்சு வாங்கும். ஆஸ்துமா, இழுப்பு பிரச்சினை உடையவர்களுக்கு அதிக சத்தத்தோடு சுவாசம் நிகழும்.

இருதயத்தினால் போதுமான ரத்தத்தினை பம்ப் செய்ய இயலாத பொழுது மூச்சு திணறுவது போல் இருக்கும். மூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். தொடர் பாதிப்பில் நோயின் தாக்கம் கூடிக் கொண்டே போகும்.

மூச்சுதிணறால் அவஸ்தைப் படுகிறீர்களா? ஆரம்ப நிலையில் சரி செய்ய வழிமுறைகள்! | Life Style Health

காரணங்கள் :

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, உயரமான இடங்களுக்கு பயணிப்பது, உடற்பருமன், ஆஸ்துமா ஆகியவை மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளது.

இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை தொடர்ந்து இருமல், இளைப்பு, நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு மேலோங்கும்.

நிமோனியா

நிமோனியா என்றால் நுரையீரல் அதிக கிருமிகளால் பாதிப்படைந்து இருக்கும். சளி பச்சை நிறமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த தொற்று எளிதில் ஏற்படும். இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல்,வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை தான் அறிகுறிகள். எக்ஸ்ரே மூலமாக இதனை கண்டுபிடிக்கலாம்.

[MFB7U ] 

நீண்ட கால சைனஸ் தொல்லை

மூக்கடைப்பு

மூக்கில் சதை வளர்ச்சி

நுரையீரல்

புற்றுநோய்

ஒத்துக்கொள்ளாத வாசனைப் பொருள்

இந்த மாதிரியான காரணங்களினால் சுவாச நோய் ஏற்படுகிறது.

பொதுவாக இதயத்தினால் போதுமான அளவு ரத்தத்தை பம்ப் பண்ண முடியாது. எல்லா உறுப்புகளுக்கும் போதுமான அளவு ஆக்சிஜன் சப்ளை கிடைக்காத போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

வீட்டிலிருந்தபடியே சுவாசப் பிரச்சினையை ஆரம்ப நிலையில் சரி செய்ய வழிமுறைகள்:

  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி தொந்தரவாக இருந்தாலும், அலர்ஜி, எந்த விதமான தொற்றுநோயாக இருந்தாலும் சரியாகி விடும்.
  • பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால் பாலில் மஞ்சள் சேர்த்து கண்டிப்பாக சாப்பிட வேண்டும். உடலில் எந்த விதமான பாக்டீரியா இருந்தாலும் நீங்கிவிடும்.
  • ஒரு வெற்றிலையோடு, 5 துளசி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு 3 எடுத்துக்கொள்ளுங்கள். இவைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் சளி, சுவாச பிரச்சனை இவை அனைத்தும் நீங்கிவிடும்.
  • தண்ணீரில் நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஆவி பிடிக்கும் போது சுவாச பிரச்சனை சரியாகிவிடும்.
  • முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதுவே மூச்சு திணறல் பிரச்சினைக்கு ஒரு காரணமாக இருக்கும்.
  • தினமும் திரிபலா சூரணம், அரை நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் சேர்ந்த சூரணத்தை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும்.

சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு பயிற்சிதான் பிராணயமம் சுவாசப்பயிற்சி. இதை கண்டிப்பாக தினமும் செய்து வந்தாலே எந்தவிதமான தொந்தரவும் இருக்காது. அதாவது உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும் . இரத்தம் சுத்தமாகும் பிராணாயாமம் செய்வதால் பல நன்மைகள் இருக்கிறது.