கருப்பு பூஞ்சை எவ்வாறு ஏற்படுகின்றது? மருத்துவர் அனிதா விஜயகுமார் கூறும் விளக்கம்!

life-style-health
By Nandhini Jun 02, 2021 05:42 AM GMT
Report

மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று சமீப மாதங்களாக இந்தியாவில் உண்டாகி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

இந்த அரிய தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். உயிர் பிழைக்கும் சிலருக்கு ஒரு கண் அகற்றப்படுகிறது. மிகவும் அரிதாக உண்டாகும் இந்த மியூகோர்மைகோசிஸ் தொற்று பாதிப்பு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த பல்லாயிரம் பேருக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் இந்த தொற்று ஏன் ஏற்படுகின்றது? இதனை எப்படி தடுக்கலாம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே இன்று வரை இல்லை. இதனை அவசியம் தெரிந்து கொள்வது நல்லதாகும்.

இந்நிலையில் மருத்துவரும் விஜயகுமாரின் மகளான அனிதா விஜயகுமார் இது பற்றி விழிப்புணர்வு பற்றி நம்மிடம் பகிர்ந்துள்ளார். தற்போது அவற்றை பார்ப்போம்.