“திமுகவை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை” - முதல்வர் பழனிச்சாமி
tamilnadu
dmk
edappadi
aiadmk
Sivaganga
By Jon
தமிழகத்தில் தேர்தல் நெருங்கியுள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, திமுக, அதிமுகவும் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டு அரசியல் களத்தில் வார்த்தை யுத்த போர் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “என் உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்வேன் என கூறினார்.
மேலும் , திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என காரசாரமாக பேசியுள்ளார்.