மகள்களை கொன்று ரத்தத்தை சிவலிங்கத்தில் பூசிய தந்தை - நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Karnataka
By Karthikraja Jul 24, 2024 05:14 PM GMT
Report

மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்று ரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தைக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

கர்நாடகா

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம் கங்ராலி கேஎச் குடியிருப்பைச் சேர்ந்தவர் அனில் சந்திரகாந்தா பாண்டேகர். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

belagavi karnataka

இந்த தம்பதிகளுக்கு அஞ்சலி(8), அனன்யா(4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், கடன் பிரச்சினை காரணமாக அனில் தனது பூர்வீக வீட்டை விற்க முயன்றார். ஆனால், அதை யாரும் வாங்க முன்வரவில்லை.

கனவு

இந்த நிலையில் அவருக்கு ஒரு கொடூர கனவு வந்ததாக கூறப்படுகிறது. அந்த கனவில் அவரது இரண்டு மகள்களையம் கொன்று அவர்களது ரத்தத்தை சிவலிங்கத்தில் பூசினால் வீடு விற்று விடும் என்றும், மேலும் அவர் செய்யும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்றும் அனிலுக்கு கனவு வந்துள்ளது.

இதனையடுத்து 14 ஜூலை 2021 அன்று அனில் தனது மகள்களுடன் பூர்வீக வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு வந்தார். அங்கு தனது இரண்டு மகள்களையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, அவர்களின் கழுத்தை அறுத்து அந்த ரத்தத்தை ஜிகாலியில் உள்ள சிவலிங்கத்தின் மீது பூசியுள்ளார்.

தண்டனை

இதை கேள்விப்பட்ட அவரது மனைவி ஜெயஸ்ரீ, தனது கணவர் அணில் மீது ஏபிஎம்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் மஞ்சுநாத் ஹிரேமத், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தார். 

life imprisonment

போலீஸ் விசாரணை, ஆதாரங்கள் மற்றும் வாதங்களைக் கேட்டறிந்த பெலகாவி 6வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, அனில் சந்திரகாந்தா பாண்டேகருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.