காய்கறி, மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கிரடாய் என்ற தனியார் அமைப்பின் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், அண்ணா நகர் எம்.எல் ஏ. மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், மளிகை பொருட்கள் பொறுத்தவரை அதனை விற்பதற்கு 7000 பேருக்கு மேல் பதிவு செய்தவர்களில் 3600 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் இவர்கள் விலை அதிகமாக வைத்து பொருட்களை விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.