செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருந்தால் உரிமம் ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருந்தால் உரிமம் ரத்து என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செயற்கை நீர்வீழ்ச்சி
அருவிகளில் இயற்கையாக இருக்கும் நீர்வீழ்ச்சியை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளதா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் ஹோட்டல்களில் வணிக பயன்பாட்டிற்காக செயற்கையாக அருவிகள் உருவாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மேலும் அதன் உரிமம் ரத்து செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்த வழக்கில், மூன்று பேர் கொண்ட குழு அரசுக்கு 3 மாதங்களில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசியில் செயற்கை அருவிகள் அமைத்தது தொடர்பான நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
சீசன் நேரங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், தனியார் ரிசார்ட்களில் இயற்கை அருவியை மாற்றியமைத்து செயற்கையாக அருவிகள் உருவாக்குகின்றனர், இதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.