துப்பாக்கிச் சூடு நடத்தி லிபியா பிரதமரை கொல்ல முயற்சி

gunshot libyanprimeminister Abdulhamid Dbeibah
By Petchi Avudaiappan Feb 10, 2022 09:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

லிபியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லிபியா நாட்டின் பிரதமராக  உள்ள அப்துல் ஹமீத் அல் திபய்பா நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த தாக்குதலில் அப்துல் ஹமீத் அல் திபய்பா அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினார். லிபியாவில் ஏற்கனவே உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில் அங்கு அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் தப்பிய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.