ரவீந்தரை 2ம் திருமணம் செய்த நடிகை மகாலட்சுமி... - வைரலாகும் உருக்கமாக பதிவு
ரவீந்தரை 2ம் திருமணம் செய்த நடிகை மகாலட்சுமி இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகை மகாலட்சுமி
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்பு சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மகாலட்சுமி. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். வி.ஜே மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் உள்ளார். மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
திருமணம்
இந்நிலையில், நேற்று திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி. மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
உருக்கமான பதிவு
நேற்று திருமண முடிந்த தருணத்தில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மகாலட்சுமி பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், "என் வாழ்க்கையில் நீ கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி... உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய். லவ் யூ அம்மு!! என்று ரவீந்திரனுக்கு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், இன்று தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், வாழ்க்கை அழகாக இருக்கிறது, அதை நீங்கள் நடக்கச் செய்தீர்கள் என் புருஷா என்று தன் அன்பை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.