தமிழக மீனவர்கள் விடுதலை - இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Sri Lanka Navy
By Thahir
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
மீனவர்கள் விடுதலை
கடந்த 6ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

மேலும் மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்க்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று 12 பேரையும் விடுதலை செய்து இலங்கை திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.