இங்கிலாந்தை விட்டு வெளியேறும் பிரபல கிரிக்கெட் வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்து அணியின் பிரபல ஆல்-ரவுண்டர் பிளங்கெட் அந்நாட்டிலிருந்து வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சூப்பர் ஓவரிலும் போட்டி டிரா ஆனதால் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை தட்டிச் சென்றது.
இந்த வெற்றியில் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவண்டர் லியாம் பிளங்கெட்டிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பந்துவீசி 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அந்தப் போட்டிக்கு லியாம் பிளங்கெட் எந்த சர்வசேத போட்டியில் விளையாடவில்லை.
இதனிடையே லியாம் பிளாங்கெட் அமெரிக்கா கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 மேஜர் லீக் கிரிக்கெட்டில் அவர் விளையாட உள்ளார்.
உன்முக்த் சந்த் உட்பட பல இந்திய வீரர்களும் இந்த லீக் தொடரில் பங்கேற்க உள்ளனர். பிளங்கெட்டின் மனைவி இமலேஹாவும் ஒரு அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.