ஒரு பாலின திருமணம்.. சட்டபூர்வமாக்கிய நாடு - எங்க தெரியுமா?
ஒரு பாலின திருமணங்கள் செய்துக் கொள்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கை
1979 ஆம் ஆண்டு கியூபாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. பல ஓரினச்சேர்க்கையாளர்களும், பெண்களும் வெளிப்படையாகவே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டி வந்தனர். குடிமக்கள் புதிய குடும்பக் குறியீட்டை அங்கீகரித்த கியூபா, வாக்கெடுப்பை முன்னெடுத்தது.
நடந்த வாக்கெடுப்பில் 74.1 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். 94 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டன, இதில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்,
புதிய சட்டம்
ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், கியூபாவில் ஒரு பாலின திருமணங்கள் செய்துக் கொள்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் LGBTQ ஜோடிகள், திருமணம் செய்துக் கொள்வதையும், குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்வதையும் அனுமதிக்கிறது.
புதிய சட்டம் என்பது, தீவு நாடான கியூபாவின் புரட்சி மற்றும் காலப்போக்கில் மாறிவரும் அதன் திறனை வெளிகாட்டுவதாக அந்நாட்டு அரசு கூறுகிறது.