ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை - மசோதா நிறைவேற்றம்!

Africa Same-Sex Marriage
By Sumathi Mar 22, 2023 06:28 AM GMT
Report

ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரின சேர்க்கை

உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை - மசோதா நிறைவேற்றம்! | Lgbtq Imposes 10 Years Jail For Homosexual Uganda

இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது போன்றவற்றிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டு சிறை

இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, இந்த மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் நமது பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவுவதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இது வெறுக்கத்தக்க சட்டம் எனக் கூறியுள்ளனர்.