LGBTQ சமூகத்தினருக்கு ஹாப்பி நியூஸ் - மத்திய நிதி அமைச்சகம் சூப்பர் அறிவிப்பு!
LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹாப்பி நியூஸ்
இந்தியாவில் LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு துவங்க எந்த தடையும் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தன்பாலின,
இருபாலின மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டில் உள்ள வங்கிகளில் கூட்டு வங்கிக் கணக்குகளைத் தொடங்கவோ, ஒருவர் தொடங்கிய வங்கிக் கணக்கில்,
சூப்பர் அறிவிப்பு
Nominee-ஆக அச்சமூகத்தைச் சேர்ந்தவரை குறிப்பிடவோ எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கூறப்பட்ட கருத்துகளின்படி,
LGBTQ சமூகத்தினர் பொது சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு காட்டப்படாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இந்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.