Go Back ஸ்டாலின்.... தெருக்களில் இறங்கி குரல் எழுப்புவோம்.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!

M K Stalin DMK BJP K. Annamalai
By Thahir Jul 03, 2023 10:32 AM GMT
Report

காவிரி நதிநீர் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் பெங்களூரு எதிர்க்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றால் திரும்பி வரும்போது Go Back சொல்லுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை

சித்தராமையா தலைமையிலான அரசு சமீபத்தில் கர்நாடகாவில் பதவியேற்றது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமார் கூறியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

Let

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது "மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசியல்வாதிகள் கூறிவந்தாலும் அதை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு உறுதிபட இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வரும் ஜூலை 16,17 தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களுருவில் நடைபெறவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றால் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

அண்ணாமலை பேச்சு 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில் "கர்நாடகாவில் காவிரி நீர் விஷயத்தில் பாஜக எந்தவித அரசியலும் செய்யவில்லை.

Let

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு வகுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் வாரியத்தின் கீழுள்ள மாநிலங்களின் அனுமதி இன்றி அணை கட்ட முடியாது.

இந்த நிலையில் மேகதாது அணை கட்டப்போகிறோம் என்று காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது. இதை நாங்கள் தேர்தல் சமயத்திலேகண்டித்தோம் என்றும் தொடர்ந்து அவர் பேசுகையில்

"தன்னை அகில இந்திய தலைவராக மு.க.ஸ்டாலின் நிலைநிறுத்தி கொள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார் எனவும் டி.கே. சிவகுமாரையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சிக்க முதலமைச்சருக்கு மனசில்லை என்றும் கூறினார்.

ஒருவேளை எதிர்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க சென்று தமிழகம் திரும்பினால் ஒவ்வொரு தமிழனும் Go Back Stalin என்று ஜனநாயக முறையில் எதிர்ப்பை காட்டுவோம்.

இதற்காக அனைவரும் தெருக்களில் இறங்கி குரல் எழுப்புவோம். விமான நிலையத்தின் முன்பும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.