தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 9,118 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது ,அந்த வகையில் கடந்த24 மணிநேரத்தில் 9,118 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,97,864 பேர் ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 559 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 210 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,548 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 22,720 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 22,66,793 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.