மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கு 1 சதவீதத்திற்கும் குறைவான நிதி - ஆர்டிஐ அதிர்ச்சி ரிப்போர்ட்

Government Of India Madurai
By Thahir Feb 27, 2023 08:02 AM GMT
Report

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளிலேயே மதுரையில் அமையவிருக்கும் கட்டிடத்திற்கு மட்டும் 1%-க்கும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது RTI அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

RTI அறிக்கையின் மூலம் அம்பலம்  

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ.1,977 கோடி மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக RTI அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

Less than 1 percent funding for Madurai AIIMS project

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.12.35 கோடி என்பது ஒட்டுமொத்த மதிப்பீடான ரூ.1,977 கோடியில் 1 சதவீதத்துக்கும் குறைவானது. கடந்த 2015-ல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டப்பட்ட 4 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கவில்லை என பல்வேறு குற்றசாட்டிகள் எழுந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாத நிலையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு மாற்று இடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

Less than 1 percent funding for Madurai AIIMS project

இதனிடையே, மதுரையுடன் சேர்ந்து அறிவிக்கப்பட்ட இமாச்சலம் பிலாஸ்பூர் எய்ம்ஸ்-க்கு மத்திய அரசு இதுவரை ரூ.1,407 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கட்டுமான பணி தொடங்காத நிலையில் பிலாஸ்பூரில் பணி முடிந்து கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அரசு ஒதுக்கிய ரூ.12 கோடியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி உள்ளிட்டவை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.