மாணவிகளுக்குள் காதல்: எதிர்ப்பால் கழுத்தை அறுத்துக்கொண்ட பெண் - பின்னணி என்ன!
காதலியை பிரிய முடியாததால், மாணவி காவல்நிலைய கழிவறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
லெஸ்பியன் உறவு
தருமபுரி, ஏர்கோல்பட்டியைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவரது மகள் ஷபிலா(21). இவரை காணவில்லை என தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் தரண்யா(22) என்ற மாணவியுடன் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து கோயம்புத்தூர் சென்று இருவரையும் அழைத்து வந்து விசாரித்ததில் தரண்யா பிஎஸ்சி முடித்துவிட்டு கோயம்புத்தூர், டைட்டில் பார்க்கில் ட்ரைனிங்கில் இருந்து வந்துள்ளார். ஷபிலா பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்கொலை முயற்சி
அப்போது இருவரும் கல்லூரி வாகனத்தில் சென்று வந்ததில் பழகியுள்ளனர். நாளடைவில், தன்பாலின ஈர்ப்பில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த ஷபிலா பெற்றோர் அதனை கண்டித்து இரண்டு மாதங்கள் கல்லூரிக்கு அனுப்பாமல் வைத்துள்ளனர்.
இதனால் இவர் புறப்பட்டு தரண்யாவுடன் சென்றுள்ளார். இந்நிலையில் இருவரிடமும் விசாரித்து விட்டு மறுநாள் ஆஜராகும்படு கூறி பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.
அதில் பிரியமாட்டோம். ஒன்றாகத்தான் வாழ்வோம் எனக் கூறியுள்ளனர். அதனையடுத்து தரண்யா காவல்நிலைய கழிவறைக்குச் சென்று பிளேடால் கையும் கழுத்தையும் அறுத்துள்ளார். அபரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைக் கண்ட ஷபிலா கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.