திருமணம் செய்து கொண்ட இரு லெஸ்பியன் அழகிகள் - வைரலாகும் புகைப்படம்

Married Viral Photos
By Nandhini Nov 02, 2022 06:20 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

மிஸ் அர்ஜென்டினா மரியானா வரேலா மற்றும் மிஸ் போர்ட்டோ ரிககோ பேபியோலா இருவரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மிஸ் கிராண்ட் சர்வதேச அழகுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், மிஸ் அர்ஜென்டினா அழகி மரியானா வரேலாவும், மிஸ் போர்ட்டோ ரிகோ அழகி பேபியோலா வாலண்டினும் சந்தித்துக் கொண்டார்கள்.

காதல் மலர்ந்தது

இதனையடுத்து இவர்கள் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். தோழிகளாக பழகி வந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனையடுத்து இவர்கள் ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்தனர் . இதன் பின், இருவரும் மிகவும் நெருக்கமானார்கள். இவர்களின் உறவை யாரிடம் சொல்லாமல் மிகவும் ரகசியமாக வைத்து வந்தனர். தற்போது இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை அறிவித்துள்ளனர்.

lesbian-beauties-viral-photos

திருமணம்

கடந்த 28ம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வெள்ளை நிற உடையணிந்து ஜோடியாக இருவரும் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மரியானா வரேலா மிஸ் யுனிவர்ஸ் 2019ல் அர்ஜென்டினா சார்பில் கலந்து கொண்டார். பின்னர், மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020 அழகி போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.