மிரட்டிய சிறுத்தை..டஃப் கொடுத்த மூதாட்டி.. திக் திக் நிமிடங்கள்

viral Leopard attack woman Mumbai
By Irumporai Sep 30, 2021 06:54 AM GMT
Report

மும்பையில் மூதாட்டி ஒருவர் தன்னை தாக்க வந்த சிறுத்தையை தடியில் அடித்து விரட்டிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பை கோரேகான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் வயதான பெண் ஒருவர் ஓய்வெடுப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளி பகுதியில் அமர்ந்துள்ளார்.

அவருக்கு பின்பகுதியில் இருட்டிற்குள் மறைந்த சிறுத்தை மெல்ல நகர்ந்து அந்த மூதாட்டியை தாக்கியுள்ளது. உடனடியாக தன் கையில் இருந்த தடியால் அந்த சிறுத்தையை மூதாட்டி தாக்கினார். சிறுத்தை அங்கிருந்து ஓடியது.

அந்த வீட்டின் சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சிறுத்தை தாக்கியதில் லேசான காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தைரியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.