இரவு நேரத்தில் வீடுபுகுந்து தாக்கிய சிறுத்தை- வேலூரில் பரபரப்பு!
வேலூரில் வீட்டுக்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் சிறுமி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், எர்தாங்கலை அடுத்த கலர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேரு நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்கு வெளியே மிருகம் ஒன்று உறுமும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது அங்கிருந்த சிறுத்தையைக் கண்டு பிரேமா கூச்சலிட, தூங்கிக்கொண்டிருந்த மனோகரன், சிறுமி மஹாலட்சுமி ஆகியோரும் வெளியே வந்துள்ளனர்.அப்பொழுது மூவரையும் சிறுத்தை தாக்கியது.
சிறுத்தை தாக்கியதில் மூவரும் படுகாயமடைந்த நிலையில், வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது. இதனை சுதாகரித்துக்கொண்ட மூவரும் சிறுத்தையை வீட்டிற்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் தகவல் தெரிவித்தனர்.
வீட்டிற்குள் சிக்கியிருக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். சிறுத்தையை இரவில் பிடிக்க முடியாது என்பதால், இரவு முதல் கண்காணித்து வந்த நிலையில் உள்ள வனத்துறையிடம் உதவியை நாடியுள்ளனர்.
குறிப்பாக வீட்டிற்குள் பதுங்கியிருக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தித்தான் பிடிக்க வேண்டும் என்ற முறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதால் மயக்க ஊசி நிபுணர்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
இந்த பகுதியில் இதற்கு முன்பு சிறுத்தைகள் நடமாட்டமோ எந்த ஒரு வனவிலங்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது இல்லை. இந்நிலையில், நகர் பகுதிக்கு சிறுத்தை வர காரணம் என்ன? சிறுத்தை வழி மாறி வந்துவிட்டதா? என குடியாத்தம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை IBC Tamil
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan