போரினால் சீர்குலைந்த உக்ரைனுக்கு நன்கொடை வழங்கிய லியோனர்டோ டிகேப்ரியோ - எத்தனை கோடி என்று தெரியுமா?
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் உக்ரைன் மீது கடந்த 24-ந் தேதி தொடங்கி இன்று வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா.
இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.


இப்போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.
தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே இதுவரை நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போரினால் சீர்குலைந்த உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நோக்கில் தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நன்கொடைகள் வழங்கி வருகின்றன.

அந்த வகையில் பிரபல ஹாலிவுட் படங்களான டைட்டானிக், இன்செப்ஷன், ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் ஹாலிவுட்-இல் நடித்து உலக புகழ் பெற்ற நடிகராக வலம் வரும் லியோனர்டோ டிகேப்ரியோ,
ரஷ்ய போரினால் பேரழிவை சந்தித்துள்ள உக்ரைனுக்கு ஆதரவாக 10 மில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 77 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.