கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி - ரசிகர்கள் சோகம்!! நெகிழ்ச்சி வீடியோ!
21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகுவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி 13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் சேர்ந்தார். 778 ஆட்டங்களில் அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார்.
தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 வெற்றி கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார்.
பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்சி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார். மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை நீட்டிக்க முன்வரவில்லை.
வாழ்நாளில் பெரும்பகுதி பார்சிலோனாவிற்காக விளையாடிய நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை என நிருபர்கள் கூட்டத்தில் மெஸ்சி கண்ணீருடன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசிய போது, என் வாழ்நாளில் இப்படி ஒரு நாள் வரும் என நினைக்கவே இல்லை. இந்த 21 ஆண்டு பயணம் முடிவடைவது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே வார்த்தைகள் வரவில்லை. கிளப்புக்குள் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன்.
ஆனால் அணிக்கு குட் பை சொல்வேன் என்று நினைத்துப்பார்ககவே இல்லை. கூடியிருந்த சக வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர்கள் நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பி மெஸ்சிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
மேலும் அவரது ரசிகர்கள் மிஸ் யூ லெஸி என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.