லியோ Second Single?..சுட சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

Vijay Anirudh Ravichander Lokesh Kanagaraj Leo
By Karthick Aug 21, 2023 12:47 PM GMT
Report

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கள் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லியோ  

விஜய்யின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஷ்கின் என பலர் நடித்துள்ளனர்.

leo-second-single-update

அக்டோபர் மாதம் 19 ஆம் இந்த படம் வெளிவரவுள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கள் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. "நா ரெடி" பாடல் பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அடுத்த பாடல் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

விரைவில் second single 

படம் வெளியாக இன்னும் ஒன்றரை மாத காலமே இருக்கும் நிலையில், படத்தின் second single இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

leo-second-single-update

இந்த செய்தி அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த செய்தி இணையத்தில் மிக பெரிய அளவில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இரண்டாவது பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.