ஆடியோ லான்ச் விவகாரம்...போலீஸ் ஸ்டேஷனுக்கு பறந்த பரபரப்பு லெட்டர்
லியோ படத்தின் இசைவெளியீடு நிகழ்ச்சி ரத்தான நிலையில், சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
விஜய்யின் லியோ
நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஷ்கின் போன்றோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் "லியோ". மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 19-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளை தற்போது படக்குழுவினர் துவங்கியுள்ளனர். தினமும் ஒரு போஸ்டர் என அதிரடி காட்டி வரும் படக்குழு படத்தின் இசை வெளியிட்டு விழாவை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்தாகி இருக்கின்றது.
போலீஸ் நிலையத்திற்கு லெட்டர்
லியோ இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், பெரியமேடு காவல்துறைக்கு லியோ பட தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான கேட்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
விஜய்யின் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பலரும் அரசியல் காரணங்களால் தான் அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்து, ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்நது வருகின்றனர்.