லியோ காலை 4 மணி காட்சி அதிரடியாக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்!!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் வேண்டும் என கொரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது.
லியோ
தற்போது தமிழ் திரையுலகில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் லியோ. விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி, அனிருத் இசை, சஞ்சய் தத், அர்ஜுன் என நட்சத்திரங்கள் பட்டாளம் கெங்ஸ்டர் கதைக்களம் என படத்தின் அனைத்தும் எதிர்பார்ப்புகளை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ரத்தானதில் துவங்கி வெளியான பாடல்கள், படத்தின் ட்ரைலர் என கடந்த ஒரு மாத காலமாகவே லியோ திரைப்படம் ட்ரெண்ட்ங்கில் தான் இருந்து வருகிறது. சமூகவலைத்தளங்களில் அரசியல் காரணங்கள் விஜய்க்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டது படத்தின் பற்றிய பேச்சை அதிகரித்துள்ளது.
கிடைக்குமா சிறப்பு காட்சி?
இந்நிலையில், படத்திற்கு சிறப்பு காட்சிகள் வேண்டும் என கூறி படக்குழு அரசிடம் அனுமதி கேட்க ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படவேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் படத்திற்கு காலை 4 மணி சிறப்பு காட்சி வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல 9 மணிக்கு இல்லாமல் 7 மணிக்கு காட்சி திரையிட அனுமதியும் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதில் தமிழக அரசு சார்பில், ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிக்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றக் கிளையில் நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை நாளை காலை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்த நீதிபதி அனிதா சுமந்த், ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிக்கு எதிராக வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்யும் படியும் அறிவுறுத்தியுள்ளார்.