அரசியல் காரணமா..? திடீரென ரத்தான லியோ ஆடியோ லான்ச்..!!
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள "லியோ" படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ரத்தாகி இருக்கின்றது.
லியோ
தற்போது தமிழ் திரையுலகில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் லியோ. விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி, அனிருத் இசை, சஞ்சய் தத், அர்ஜுன் என நட்சத்திரங்கள் பட்டாளம் கெங்ஸ்டர் கதைக்களம் என படத்தின் அனைத்தும் எதிர்பார்ப்புகளை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி மாபெரும் வகையில் நடைபெறவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து தலைப்பு செய்திகளாக இருந்தன.
அரசியல் காரணங்களா..?
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்றது. டிக்கெட் விநியோகமும் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால், இதற்கான ஏற்பாடுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு பாஸ் கோரிக்கைகள் நிரம்பி வழியும் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். மேலும், இது பலரும் நினைப்பது போல, இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Considering overflowing passes requests & safety constraints, we have decided not to conduct the Leo Audio Launch.
— Seven Screen Studio (@7screenstudio) September 26, 2023
In respect of the fans' wishes, we will keep you engaged with frequent updates.
P.S. As many would imagine, this is not due to political pressure or any other…