ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டிருந்ததா? உண்மை என்ன?

delhi stalin car lemon
By Irumporai Jun 18, 2021 10:04 AM GMT
Report

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நேற்று இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார்.

நேற்று மாலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் உட்பட 25 கோரிக்கைகளை முன்வைத்தார்.

இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியினை சந்தித்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரின் டயருக்கடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவியது .

இது இணையத்தில் விவாத பொருளாக விவாதிக்கப்பட்டது இதுதான் பகுத்தறிவா என இணைய வாசிகள் கேள்வி எழுப்பினர் .

பலர் அந்த காரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக  பிரபல தமிழ் தொலைக்காட்சி டெல்லி செய்தியாளர் நிரஞ்சன் தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில் ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரின் டயருக்கடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டிருக்கிறது இதுதான் பகுத்தறிவா என கேள்வி எழுப்பி நிறைய பேர் இந்த புகைப்படத்தை பகிர்கின்றனர்.

ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்திருந்தபோது எடுக்கப்பட்ட படம் இது. இதை எடுத்தது நான்தான்.

இந்த படத்தின் பின்னணியில் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் இருப்பதை காண முடியும். மேலும் ஸ்டாலின் வந்த காரின் பின்புறம் ஜெயலலிதா படம் இல்லை.

அதோடு இரண்டு கார் எண்களும் வேறு வேறு என விளக்கம் கொடுத்து சர்ச்சையினை முடித்து வைத்துள்ளார்.