ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறாரா ரசிகர்களை கவர்ந்த இளம் பெண் நடுவர்? - அப்படி என்ன சிறப்பு?
லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பெண் நடுவர் ஒருவரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
ஓமனில் முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் வீரர்களை விட களத்தில் பங்கேற்கும் நடுவர்கள் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகின்றனர்.
அதற்கு காரணம் முழுக்க முழுக்க பெண் நடுவர்கள் தான் இந்த தொடரில் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுப்தா போஷ்லே கெயிக்வாட் என்ற நடுவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் மிகவும் இளம் கிரிக்கெட் நடுவரான அவரை ஐபிஎல் தொடருக்கும் நடுவராக நியமிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரத்தை சேர்ந்த சுப்தா போஷ்லே கெயிக்வாட்டின் தந்தை ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர். அவரது சகோதரர். உறவினர்கள் ரஞ்சிக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளனர்.
இதன் காரணமாக கிரிக்கெட் மீது காதல் கொண்ட அவர் மத்திய பிரதேச அணிக்காக U 16, U 19 தொடர்களில் விளையாடியுள்ளார். அதன்பின் நடுவருக்கான O பிரிவை முடித்த சுப்தா போஷ்லே 2012 ஆம் ஆண்டு முதல் முக்கிய உள்நாட்டு தொடர்களுக்கு களநடுவராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஐபிஎல் தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ஏனெனில் ஐபிஎல்லில் அதிகப்படியான பந்துகள் அம்பயர் நிற்கும் திசைகளிலும் பறக்கும் என்பதால் பாதுகாப்பு பிரச்சினைகள் அவருக்கு அதிகம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan