பழம்பெரும் நடிகை மரணம் : திரையுலகினர் அஞ்சலி

Jamuna Death
By Irumporai Jan 27, 2023 06:11 AM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடியாகையாக இருந்த பழம் பெரும் நடிகை ஜமுனாவயது மூப்பு காரணமாக காலமானார்.

நடிகை ஜமுனா

கர்நாடக மாநிலம் ஹம்பியில் கடந்த 1936 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமுனா. சிறுவயதில் நாடகங்களில் நடித்து வந்த இவர் 1952 ஆம் ஆண்டு தெலுங்கில் புட்டிலு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் தங்க மலை ரகசியம், நிச்சயதாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு, மனிதன் மாறவில்லை, மருதநாட்டு வீரன், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

பழம்பெரும் நடிகை மரணம் : திரையுலகினர் அஞ்சலி | Legendary Telugu Actor Jamuna No More

திரையுலகினர் அஞ்சலி 

அதேசமயம் அரசியலிலும் தனது பங்கை செலுத்த தொடங்கினார் 1980 முதல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த ஜமுனா1989 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார், அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் தனது 86 வயதில் இன்று காலமானார், அவருக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.