வேற லெவல் அண்ணாச்சி.. அவமானப்படுத்திய நயன்தாராவை அலரவிட்ட லெஜன்ட் சரவணன்

Saravanan Nayanthara The Legend
1 வாரம் முன்

நயன்தாராவுக்கு அண்ணாச்சி சத்தம் இல்லாமல் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி லெஜெண்ட் திரைப்படம் 

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், விளம்பரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் 'தி லெஜண்ட்' என்ற தலைப்பில் உருவானது தான் இந்த திரைப்படம் . ஜே. டி - ஜெரி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளனர்.

Legend Saravanan

ஊர்வசி ராவ்டேலா, பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் (மறைந்த) விவேக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மொசலோ மொசலு' மற்றும் 'வாடி வாசல்' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

நடிக்க மறுத்த நயன்தாரா 

இந்நிலையில், அண்மையில் தியேட்டர்களில் வெளியானது இந்த திரைப்படம். பிரபல முன்னணி நடிகையான நயன்தாராவை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க சரவணன் விரும்பியுள்ளார்.

Nayanthara

இதையடுத்து படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் படத்தில் நடிக்க முடியாது என நயன்தாரா கூறியுள்ளார்.

படத்தில் நடித்தால் பல எத்தனை கோடி வேண்டுமானாலும் தருகிறோம் என்று கூறியும் நயன்தாரா மறுத்துள்ளார்.

அதிரடி காட்டிய லெஜன்ட் 

இதையடுத்து பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கோலிவுட் படங்களில் நடிக்க நயன்தாரா ரூ.10 கோடி வாங்குகிறார்.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்த ஊர்வசி ராவ்டேலாவுக்கு சம்பளமாக 20 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்துள்ளார் சரவணன்.

Nayanthara

இதன் மூலம் கோலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைக்கான அந்தஸ்த்தை இழந்துள்ளார் நயன்தாரா. நயன்தாராவுக்கு அண்ணாச்சி சரவணன் செய்த செயலை தான் ரசிகர்கள் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.