அரசியலுக்கு வரும் லெஜண்ட் சரவணன் .. அவரே சொன்ன பரபரப்பு தகவல்
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான தொழிலதிபர் சரவணாவின் தி லெஜெண்ட் படம் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியானது.
அரசியலுக்கு வரும் லெஜெண்ட்
இந்த நிலையில் மக்கள் கூப்பிட்டால் அரசியலுக்கு வருவேன் என லெஜண்ட் சரவணா கூறியுள்ளார்.. கோவையில் நடந்த கடை திறப்பு விழாவில் பங்கேற்றிருந்த லெஜெண்ட் சரவணா அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது திலெஜண்ட் படத்திற்கு பிறகு அடுத்த படம் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
மக்கள் கூப்பிட்டால் அரசியல்தான்
அப்போது செய்தியாளர்கள் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கின்றதா என கேள்விஎழுப்பினர். அதற்கு அது மக்களும் மகேசனும்தான் முடிவு பண்ணனும். மக்கள் கூப்பிட்டால் வருவேன்.' என்று அதிரடியாக பதிலளித்திருக்கிறார் சரவணன்.
இதையடுத்து, தமிழக்கத்தில் நடக்கும் ஆட்சியை பற்றி கேட்டபோது, நல்லா சிறப்பாக இருக்கிறது.' என்று சரவணன் தெரிவித்துள்ளார்.