லெஜண்ட் சரவணனுடன் நடிக்கும் மணிமேகலை - குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதற்குத்தானா?
மணிமேகலை லெஜண்ட் சரவணா உடன் நடித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மணிமேகலை
பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை. தற்போது 4ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்தார்.
மேலும், அவர் கர்ப்பமாக இருப்பதால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், லெஜண்ட் சரவணன் நிறுவனத்தின் அடுத்த விளம்பர படத்தில் குக் வித் கோமாளி சீசன் மூன்று
விளம்பரம்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்ற ஸ்ருதிகா மற்றும் கோமாளி மணிமேகலை ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இது குறித்த புகைப்படத்தை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நேற்று சரவணன் அவர்களுடன் விளம்பர படப்பிடிப்பு கலந்து கொண்டேன்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. சரவணன் அவர்கள் மிகவும் எளிமையானவர் மற்றும் அன்பானவர், அவருடன் நடித்த இந்த படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது, அதுமட்டுமின்றி எனது பைத்தியக்கார தோழி ஸ்ருதிஹாவுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்து பணி புரிந்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.